சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் ஆற்றின் கரைக்கு வந்து, தண்ணீரில் இருக்கும் ஒரு ராட்சத முதலையை சத்தமிட்டு அழைக்கிறான். அடுத்த சில நொடிகளில் அந்த முதலை சிறுவனை நோக்கி நீந்தி வருகிறது. பொதுவாக முதலையைக் கண்டாலே அலறியடித்து ஓடும் நிலையில், அந்தச் சிறுவன் எவ்வித அச்சமும் இன்றி அந்தப் பயங்கர விலங்கின் வாயைத் திறந்து பிரஷ் கொண்டு அதன் பற்களைத் தேய்த்து விடுகிறான்.
சுமார் 35 வினாடிகள் நீடிக்கும் இந்த வீடியோவில், அந்த முதலை சிறுவனுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல் அமைதியாகப் பற்களைத் துலக்கிக் கொள்கிறது. பற்களைச் சுத்தம் செய்த பிறகு, அந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள்ளேயே சென்று விடுகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 1.3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளதுடன், 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைக் குவித்து இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சிலர் “யமராஜனிடம் ஏன் விளையாடுகிறாய்?” என அச்சத்துடன் கமெண்ட் செய்துள்ளனர். அதே சமயம், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், அல்லது இறந்த முதலையை வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விசித்திரக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…