மகனுக்கு 3 சக்கர வண்டி வாங்க காசில்லை.. இன்று ₹12 கோடிக்கு அதிபதி!.. கண்ணீர் விட்ட ஏழைத் தந்தையின் விபரீத அதிர்ஷ்டம்.. நெட்டிசன்களை உருகவைத்த சம்பவம்..!!

Spread the love

கேரள மாநில அரசின் சித்திரை விஷூ பம்பர் லாட்டரி குலுக்கலில், கொல்லம் மாவட்டம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த ஏழை பெயிண்டிங் தொழிலாளியான பொன்னன் என்பவருக்கு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு விஷூ பண்டிகையை முன்னிட்டு 300 ரூபாய் விலையில் அச்சிடப்பட்ட 45 லட்சம் டிக்கெட்டுகளும் முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், நேற்று நடைபெற்ற குலுக்கலில் ‘VB 135452’ என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கு இந்த அசுர அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கொல்லம் கருநாகப்பள்ளி சப்-ஆபீஸ் முகவரான அனிலின் ஏஜென்சியில் இருந்துதான் இந்த பரிசுக்குரிய டிக்கெட் விநியோகிக்கப்பட்டுள்ளது.

76 வயதான பொன்னனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான பின்னணியைக் கொண்டது. பல கிலோமீட்டர் நடந்து லாட்டரி விற்று வந்த பொன்னன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் காலில் காயமடைந்து பெயிண்டிங் வேலைக்கு மாறினார். குடும்ப பாரத்தைச் சுமக்க அவரது 67 வயது மனைவி ராதாமணியம்மாவும், காலில் செயல்திறன் குறைபாடுள்ள 37 வயது மகன் வினோத்குமாரும் தினமும் 14 கிலோமீட்டர் நடந்து லாட்டரி சில்லறை வியாபாரம் செய்து வந்தனர். சமீபத்தில் வினோத்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்குப் பதிலாக ஏஜென்சிக்குச் சென்று டிக்கெட் வாங்கி வரச் சென்ற பொன்னன், தனக்காக எடுத்த ஒரு டிக்கெட்டே இவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது.

வழக்கமாக ‘2’ என்ற எண்ணில் முடியும் டிக்கெட்டுகளை வாங்கும் பழக்கமுள்ள பொன்னன், இந்த முறையும் அவ்வாறே தேர்ந்தெடுத்துள்ளார். லாட்டரி முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது தங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதை அறிந்து இக்குடும்பம் எல்லையற்ற மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. இந்த ஜாக்பாட் பரிசு குறித்துப் பேசிய பொன்னன், தங்களுக்கு இருக்கும் கடன்களை அடைக்கப் போவதாகவும், மாற்றுத்திறனாளியான தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவன் லாட்டரி வியாபாரம் செய்ய பஞ்சாயத்தில் கிடைக்காத ஒரு மூன்று சக்கர வாகனத்தை வாங்கித் தரப் போவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

குஷியோ குஷி..! இனி கிராமங்களுக்கும் மின்னல் வேக டெலிவரி… பிளிப்கார்ட் – இந்திய தபால் துறை போட்ட மாஸ் டீல்..!!

முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart), நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்களது பார்சல் சேவையை விரைவாக வழங்கும் நோக்கில்…

8 minutes ago

“அடிதடி இல்லை.. சத்தமே இல்லை!.. குப்பையை உங்களுக்கே திருப்பித் தர்றேன்.. சுற்றுலாப் பயணிக்கு உள்ளூர் நபர் கொடுத்த ‘தரமான’ செய்கை.. வைரல் வீடியோ”..!!

முசோரி மலைப்பகுதிக்குச் செல்லும் சாலையில், சுற்றுலாப் பயணிகள் காரிலிருந்து நெகிழி கழிவுகளை வெளியே வீசிய சம்பவமும், அதற்கு ஒரு சமூக…

9 minutes ago

நெஞ்சை உலுக்கும் வக்கிரம்..! நாயை கூட விடமாட்டீங்களா..? யாருக்கும் தெரியாமல் பாலியல் வன்கொடுமை செய்த நபர்.. சிசிடிவி காட்சியால் பயங்கர ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாடி ராவேத் பகுதியில், பெண் நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

10 minutes ago

மீண்டும் நடிக்க வரும் உதயநிதி?…. பின்னணியில் இருக்கும் அந்த ‘பவர்ஃபுல்’ அரசியல் பிளான்…. டிவிட்டரை அதிர வைக்கும் ‘அந்த’ ஒரு நியூஸ்….!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் எனப் பல முகங்களுடன் வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு…

10 minutes ago

கணவனுக்கு நேர்ந்த கொடூரம்: கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றுவிட்டு சடலத்தின் அருகிலேயே.. காதலனுடன் மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண், தனது சகோதரி மற்றும்…

13 minutes ago

போடு ரகிட ரகிட… இனி இவர்களுக்கும் வருகிறது மகளிர் உரிமைத்தொகை ரூ.2500…. தமிழக அரசு சூப்பர் குட் நியூஸ்…!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள்…

15 minutes ago