திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. திமுக அரசு பெண்களுக்கு வழங்கும் இலவசப் பொருட்கள் மற்றும் பண விநியோகம் குறித்து விமர்சித்த அவர், “திமுகவினர் முதலில் பணம் கொடுத்தார்கள், பிறகு ஹாட் பாக்ஸ் கொடுத்தார்கள், இப்போது சேலை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்டுவது என்று பெண்கள் கேட்கிறார்கள்” எனப் பேசியுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்திலேயே, ஒரு முன்னாள் அமைச்சர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இத்தகைய இரட்டை அர்த்தவசனங்களைப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசிய சர்ச்சை அடங்குவதற்குள், திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு நெட்டிசன்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும், “பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசும் மேடையில் இவ்வளவு வக்கிரமாகவா பேசுவது?” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிமுகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது அக்கட்சிக்குத் தேர்தல் களத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…