Categories: சினிமா

தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்த எலான் மஸ்க்.. வேர்ல்ட் லெவலில் ஃபேமஸான துரை சுதாகர்.. காட்சியை ரிகிரியேட் செய்த வைரல் வீடியோ..!

Spread the love

தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாக்கியதற்கு அப்படத்தின் நடிகர் துரை சுதாகர் எலான் மஸ்க்குக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார்.

டெஸ்லா நிறுவனத்தின் அதிபரான எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தமிழ் திரைப்படமான தப்பாட்டம் படத்தின் ஒரு காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீமை பகிர்ந்திருக்கின்றார். இது உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கின்றது. இது குறித்து அப்படத்தில் நடித்த நடிகர் துரை சுதாகர் தெரிவித்திருந்ததாவது நான் களவாணி 2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றேன்.

எலான் மஸ்க் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து என்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கிவிட்டார். இந்த புகைப்படம் உலக நாடுகள் முழுவதும் பரவி அங்கிருக்கும் தமிழ் மக்களும் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறார்கள். இது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் ஏற்கனவே இரண்டு பெரிய நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் ஓபன் ஏ ஐ நிறுவனங்களை சீண்டி கொண்டிருக்கின்றார்.

உலகளவில் பிரபலமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தங்களது மேக் புக், ஐபோன். ஐபேட் போன்ற சாதனங்களில் ஓபன் ஏஐ டூள்களை இனி பயன்படுத்தலாம் என்று அந்த நிறுவனத்தின் சிஇஓ டீம் குக் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதனை கண்டித்து எலான்மஸ்க் ட்விட் செய்திருந்தார். அதற்கு யாரோ ஒருவர் உருவாக்கிய மீம்ஸஸை எடுத்து எலான் மஸ்க் பகிர்ந்திருந்தார்.

அதாவது ஒரு இளநீரை படத்தின் நாயகி ஸ்ட்ரா வைத்து குடிக்க அதை நாயகன் கதாநாயகியின் வாயிலிருந்து ஒரு ஸ்ட்ரா வைத்து குடிக்கிறார். இந்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு முஜிஃபர் ரஹ்மான் இயக்கத்தின் வெளியான தப்பாட்டம் படம். இதில் துரைசுதாகர் மற்றும் டோனோ ரவுசாலியோ நடித்திருப்பார்கள்.

இப்படத்தின் காட்சி தற்போது பரவி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. மேலும் சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த துரைசுதாகர் அந்த படத்தில் எதார்த்தமாக நடித்த காட்சி எனவும் அதனை மீண்டும் ரீகிரியேட்டிவ் செய்திருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

4 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

5 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago