பாகுபலி, கே.ஜி. எஃப் விட ஒரு படி மேலயா…? “தங்கலான்” படத்திற்கு மக்கள் கூறும் விமர்சனம் என்ன…?

Spread the love

பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பா ரஞ்சித்தின் நீலம் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து ஸ்டுடியோ கிரீன் கீழ் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, டேனியல், பசுபதி, ஹரிகிருஷ்ணன், சம்பத் ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைதுள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தை பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் திருடுவதை தடுக்கும் ஒரு சமூகத்தினரை பற்றிய கதை என்று தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும் தங்கலான் என்ற பெயருக்கு அர்த்தம் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு ஏற்படும் பிரச்சனையை தடுப்பதற்கு எவனொருவன் முன்னணியில் வருகிறாரோ தலைவனாக இருக்கிறாரோ தன் சமூகத்துக்காக போராடுகிறாரோ அவரை தங்கலான் என்று குறிப்பிட்ட சமூகத்தினர் அழைப்பார்கள் என்று பா ரஞ்சித் கூறியிருந்தார். இப்படத்தின் போட்டோக்கள் விக்ரமின் கெட்டப்புகள் என ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

நடிகர் விக்ரம் நடிக்கும் 61 வது படம் தங்கலான் இப்படம் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டதோடு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருப்பதாக பா ரஞ்சித் கூறியிருந்தார். இப்படத்தில் பழங்குடியின மக்கள் போல் உடைகளை தயாரிக்க எந்த ஒரு செயற்கை வண்ணமும் இல்லாமல் இயற்கையான வண்ணங்களை கொண்டே தயார் செய்து உள்ளோம் என்று இப்படத்தின் காஸ்டியூம் டிசைனர் ஏகாம்பரம் கூறியிருந்தார். விக்ரம் அவர்களின் கெட்டப்புக்கான மேக்கப் அப்படியே தத்ரூபமாக இருக்கும். இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உள்ளோம் என்று ஒவ்வொரு நடிகர் நடிகைகள் என எல்லோரும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூறியிருந்தனர்.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்காக கடும் உழைப்பை போட்டு ஒரு படி மேலே சென்று இசையை உருவாக்கி இருக்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் படம் அந்த நேரம் கொண்டாடப்படவில்லை. ஆனால் அதற்குப் பிறகு நிறைய பேசினார்கள். ஆனால் இந்த தங்கலான் படம் வெளியான உடனே அனைவரும் பேசுவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்திற்காக நாங்கள் கடின உழைப்பை போட்டிருக்கோம் என்று ஜி வி பிரகாஷ் கூறியிருந்தார்.

சீயான் விக்ரமின் கடுமையான உழைப்பிற்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மக்கள் இந்த படத்திற்கு என்ன விமர்சனம் கூறியிருக்கிறார்கள் என்பதை இனி காண்போம்.

முதலில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் போகப்போக நல்ல விமர்சனங்களை மக்கள் கொடுத்திருக்கின்றனர். சீயான் விக்ரமின் நடிப்பு இப்படத்தில் அபாரமாக இருக்கிறது. கதை திரைக்கதை விஷுவல் எல்லாம் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது என்று மக்கள் கூறியுள்ளனர். ஆக்சன் காட்சிகள், வில்லன் என்ட்ரி, விக்ரமின் நடை உடை அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை செம சூப்பராக உள்ளது. பாகுபலி, கே. ஜி. எஃப் விட பிரமாண்டமாக இருக்கிறது, ஹாலிவூட் தரத்திற்கு இருக்கிறது என பெருவாரியான மக்கள் பாசிட்டிவ் ரிவ்யூவே கொடுத்துள்ளனர்.

admin

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago