#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்பொழுது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.
அதன்படி நடிகர் விஜய் இத்திரைப்படத்தில் 19 வயது வேடத்திலும் நடிக்க உள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு சமீபத்தில் தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்றது. ‘ தளபதி 68’ படத்தின் தலைப்பு First லுக் உடன் வருகிற புத்தாண்டு அன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்திற்கு ‘பாஸ்’ என்ற டைட்டிலை வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இந்த டைட்டில் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் எனவும் இணையத்தில் தகவல்கள் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது X தள பக்கத்தில் விளக்கமும் அளித்திருந்தார். இந்நிலையில் தளபதி 68 படத்தின் தலைப்பு G.O.A.T என கூறி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பொருள் G.O.A.T = Greatest Of All Time என்பதே ஆகும். தற்போது சமூக வலைத்தளத்தில் G.O.A.T எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.இதனை தளபதி ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வந்தாலும், ஒருசிலரோ தமிழ்நாட்டுக்கு தளபதின்னு சொல்லிட்டு வைக்கிறது எல்லாம் இங்கிலிஷ் பட டைட்டிலா என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…