சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171-வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டியில், நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தை நாங்கள் சாதாரண கேமராவில் படமாக்கி அதன் பிறகு ஐமேக்ஸ் தொழில் நுட்பமாக மாற்றினோம்.
ஆனால் தலைவர் 171 படத்தின் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே லியோ படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்த மனோஜ் பரமஹம்சா தான் தலைவர் 121-வது படத்திலும் வேலை பார்க்க உள்ளார். அவர் தலைவரின் 171-வது படத்தின் சில காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் படம் பிடிப்பார். கோலிவுட் திரையுலகிலேயே ஒரு திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிரடி இயக்குனரான லோகேஷ் ஏற்கனவே விஜய், திரிஷா நடிப்பில் உருவான லியோ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பல்வேறு முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அதிரடியாக உருவான லியோ படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் இயக்க உள்ள தலைவர் 121-வது படமும் மாபெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…