#image_title
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுதும் மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
‘லால் சலாம்’ படத்தை முடித்த பின்னர், நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து தலைவர் 171 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தலைவர் 170 திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப்பச்சன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலுடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ‘குறி வச்சா இரை விழணும்’ என்று மாஸாக சூப்பர் ஸ்டார் பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…