பீகார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கானது. கடந்த நவம்பர் 6 அன்று 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு நாளை இரண்டாவது கட்டம் நடக்கிறது. வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்டம் காலை 7 முதல் மாலை 5 வரை அமைதியாக நடந்தது. பெரிய அளவில் வன்முறை இல்லை. 64.66 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாவது கட்டத்திற்கான பிரச்சாரம் நேற்று மாலை முடிந்தது.
இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி பல கூட்டங்கள் நடத்தினார். அடுத்த 5 ஆண்டுகளில் பீகாரை எவ்வாறு முன்னேற்றுவது என வழிகாட்டி தர வேண்டும். மோடி இப்போது எல்லா வகை பாடல்களும் பாடுகிறார். அவருக்கு நேரம் உண்டு. அவர் எந்த வெப்சீரிஸ் பார்க்கிறாரோ தெரியாது. ஆனால் தேஜஸ்வி வேலைவாய்ப்புகளை அளிக்கிறார்.
சாம்ராட் சவுத்ரி, திலீப் ஜெய்ஸ்வால், மங்கள் பாண்டே போன்றோரின் ஊழல், மோசடிகளை மோடி பார்க்கவில்லை. அவர்களை கேள்வி கேட்டிருக்கிறாரா? பீகாரின் முக்கிய குற்றவாளிகளுடன் மோடி மேடையைப் பகிர்கிறார். ஆனந்த் சிங், உல்லாஸ் பாண்டே, ராஜவல்லப், மனோரமா தேவி, ஆனந்த் மோகன், சுனில் பாண்டே போன்றோர் நல்லவர்களா? என கேட்டார். பாஜகவில் சேர்ந்தால் பாவங்கள் கழுவப்படும். கங்கையில் குளித்தால் பாவம் கழியுமா? பாஜகவில் சேர்ந்தால் உங்கள் பாவம் கழியும் என விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில், சமூக வலைதளங்களில் பிரபலமடைய 'ரீல்ஸ்' எடுக்க முயன்ற இளைஞர்களின் முயற்சி விபரீதத்தில் முடிந்தது.…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் ஒட்டுமொத்த…
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு குறுகிய சந்தில், தனது மின்சார ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மின்சாரக் கம்பியைத்…
தமிழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே பல தொகுதிகளில் நடிகர்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்புமுனையாக 2026 சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தல்…
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் தவறான பாதையில் (Wrong Side) வந்த பெண் ஒருவர், எதிரே பேருந்து வருவதைக் கண்டும்…