தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருக்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகிறது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் பயணம் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இரண்டு மாநாடுகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி முடித்த விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கினார். இதனால் விஜயின் அடுத்த கட்ட நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. விஜயின் அரசியல் வருகைக்கு ஒரு பக்கம் ஆதரவுகள் குவிந்தாலும் மறுபக்கம் அரசியல் பிரபலங்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு டாப் கொடுக்கும் வகையில் “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற தவெகவின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை விஜய் தீவிர படுத்தியுள்ளார். இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பிரத்தியேக செயலியை அவர் வெளியிட்டிருந்தார். தற்போது உறுப்பினர் சேர்க்கைக்காக 234 தொகுதிகளுக்கும் தலா 8 நிர்வாகிகளை நியமித்து விஜய் அதிரடி காட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…
கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…
பிரான்ஸின் லியோன் நகரைச் சேர்ந்த 19 வயதான கிளியோ வெர்டியர், கடந்த 2025 ஜூன் மாதம் கடும் மன உளைச்சல்…
பிரான்ஸின் சௌன்-எட்-லோயர் (Saône-et-Loire) பிராந்தியத்தில் உள்ள காடுகளில் மான்கள் சில விசித்திரமாக நடந்து கொள்வது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு மான்…
மும்பை மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த அர்பாஸ் என்ற வாலிபர் அண்மையில் திடீரென காணாமல் போன நிலையில், அவர் பணத்திற்காகக் கொடூரமான…
புது தில்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உள்ளடக்கப் படைப்பாளியான (Content Creator) இந்தா என்ற பெண் பயணிக்கு ஏற்பட்ட…