தமிழகத்தில் உள்ள சுமார் 4,500-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்காகத் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். தற்போது கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான ஆரம்பகட்டப் பணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியின்படி, 5 பவுன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான பயன் அடைந்த நிலையில், சுமார் 4,904 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே போன்றதொரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளதால், குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நகைக் கடன் தள்ளுபடித் திட்டமானது அனைவருக்கும் பொருந்தாது என்றும், தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்யக் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, அரசு ஊழியர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட மாட்டாது. மேலும், ஒரு குடும்பத்திற்கு ஒருமுறை மட்டுமே தள்ளுபடி என்ற விதியின் அடிப்படையில், ஆதார் எண் மற்றும் ரேஷன் கார்டு விவரங்களை வைத்துத் தகுதியான பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
தற்போது மண்டல இணைப் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் சேகரிக்கப்படும் இந்தத் தரவுகள் சரிபார்க்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ள ஏழை எளிய மக்கள், அரசின் இந்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு மக்கள் தங்கள் நகைகளை மீட்க வழிவகை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…