தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் அரங்கேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திமுக, தவெக-வின் எழுச்சியால் ஆட்சியைப் பறி கொடுத்து 73 இடங்களுடன் (கூட்டணி) எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளப்பட்டது. அதேபோல், அதிமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களைக் கைப்பற்றி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளார். பல தசாப்தங்களாகத் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழகத்தில், ஒரு புதிய கட்சி இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது அரசியல் நோக்கர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, திருப்பத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தத் தேர்தலின் விறுவிறுப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழகம் 34.95% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. திமுக கூட்டணி 31.38% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 27.40% வாக்குகளையும் பெற்றுள்ளன. தனித்தப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 4% வாக்குகளைப் பெற்றுள்ளது. தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி, அக்கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களிடையே இருந்த பெரும் வரவேற்பை உறுதிப்படுத்தியுள்ளது.
கூட்டணி ரீதியாகப் பார்க்கும்போது, திமுக நேரடியாக 59 இடங்களிலும், காங்கிரஸ் 5, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 என மொத்தம் 73 இடங்களை வென்றுள்ளன. அதிமுக 47 இடங்களிலும், பாமக 4, பாஜக 1 என மொத்தம் 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. திமுக தென் மாவட்டங்களிலும், அதிமுக சில கொங்கு மண்டலத் தொகுதிகளிலும் ஓரளவு செல்வாக்கை நிலைநிறுத்தினாலும், தவெக ஐந்து மண்டலங்களில் மூன்று மண்டலங்களை முழுமையாகக் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமரத் தயாராகிவிட்டது.
தவெக-வின் இந்த வெற்றி தமிழக அரசியலில் ‘திராவிட மாடல்’ மற்றும் ‘அதிமுக-திமுக’ ஆகிய இருமுனைப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி, ஒரு புதிய தலைமைக்கு வாய்ப்பளித்துள்ளதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வரும் நாட்களில் தவெக ஆட்சியமைக்கும் பணிகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் இப்போது ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள இமாலய வெற்றிக்கு, தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரும் தெலுங்கு தேசம்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று, அவர் அடுத்த முதலமைச்சராகப்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 1952-க்குப் பிறகு தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'தொங்கு சட்டமன்ற' சூழலை…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தேர்தலில் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்ட…