தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட டி.செல்வம், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், சென்னை பனையூரிலுள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.
அவருக்கு விஜய் கட்சியின் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். டி.செல்வத்துடன் அதிருப்தியில் இருந்த சில காங்கிரஸ் நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளதாகக் கூறப்படுவது, வரும் தேர்தலை நோக்கி காய்களை நகர்த்தி வரும் தவெகவிற்கு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…
விசிக (VCK) கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த வன்னி…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆதரவு அளிப்பது குறித்து அக்கட்சியின்…
பெங்களூரைச் சேர்ந்த ஷிஃப்னாஸ் ஷெரீப் என்ற பெண், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கிய கார்ப்பரேட் வேலையைத் துறந்து,…
கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், விஜய் 5 ஆண்டுகளுக்குச் சிக்கலின்றி ஆட்சி அமைக்க உதவுவதாகப் பாரதிய ஜனதா கட்சி (பாஜக)…
"தவெக-விற்கு வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில் எனது கையெழுத்து இல்லை" என்று அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.…