தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா தன் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய அழகிய தருணங்களை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. 2020-ல் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது இதில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை அள்ளியுள்ளது.
விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா ஜனாதிபதி திரௌபதி முர்மு கையில் இருந்து விருதினை பெற்றுக்கொண்டார். தேசிய விருது வாங்கிய நடிகர் சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை பதிவிட்டு இயக்குனர் சுதா கொங்கராவுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
மேலும் தனது அன்பான ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…