Categories: CINEMA

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் லேட்டா வரும் நடிகர் சூர்யா.. கங்குவா படம் முடிஞ்சும் இதே நிலைமையா.. காரணம் என்ன தெரியுமா..?

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் நடிகர் சூர்யா தினமும் லேட்டாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதற்கு அவர் ஒரு காரணத்தையும் கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். நடிப்புக்காக பல மெனக்கடலை  செய்யக்கூடிய ஒரு நடிகர். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அதனை தொடர்ந்து வணங்கான் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வந்தார்.

பின்னர் அந்த திரைப்படத்திலிருந்து விலகிய சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகப்போகும் நிலையில் தற்போது வரை அவரின் எந்த திரைப்படம் வெளியாகவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக கங்குவா திரைப்படத்தில் தான் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

இந்த திரைப்படமும் தற்போது முடிந்துவிட்டது. மேலும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது . வரலாற்று பின்னணியில் அமைந்த இந்த கதையில் சூர்யா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து நேற்று கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் காட்சிகள் அந்தமானில் படமாக்கப்பட்டு வருகின்றது. தினமும் படப்பிடிப்புக்கு நடிகர் சூர்யா 2 மணி நேரம் தாமதமாக வருகிறார். அதற்கு காரணம் சூர்யாவின் ஜிம் ஒர்க் அவுட் என்று கூறப்படுகின்றது .

ஏனெனில் கட்டு மஸ்தான உடம்பில் சூர்யா இந்த திரைப்படத்தில் நடிப்பதால் தினமும் ஜிம்முக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் ஜிம் இருப்பதால் அங்கு சென்று வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. இது சூர்யாவின் ஜிம் இல்லை, படத்திற்கு தேவை என்பதற்காக இப்படி ஒரு விஷயத்தை நடிகர் சூர்யா செய்து வருகிறார் என்று கூறி வருகிறார்கள். பட குழுவினரும் இதனால் அவரை எதுவும் கூறுவது கிடையாதாம்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

தமிழ், மலையாளம் எல்லாம் இல்லையாம்.. ஸ்ட்ரெயிட்டா பாலிவுட் நடிகையை தட்டி தூக்கிய கவின்.. வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் கவினின் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

8 மணி நேரங்கள் ago

கௌதம் கார்த்திக்கா இது..? மறைந்த பாலிவுட் நடிகர் போல மாறிட்டாரே.. மனைவி மஞ்சிமா வெளியிட்ட போட்டோஸ் வைரல்.

பிரபல நடிகர் ஆன கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த…

9 மணி நேரங்கள் ago

குடும்பத்தினருடன் சென்று பல லட்சம் மதிப்புள்ள காரை வாங்கிய பிக் பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…

11 மணி நேரங்கள் ago

பொண்ணு மாப்புள ஜோரு, ஒண்ணா சேருது பாரு.. கலைக்கட்டிய நடிகை வரலட்சுமியின் திருமணம்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…

12 மணி நேரங்கள் ago

மஞ்ச காட்டு மைனா, என்ன கொஞ்சி கொஞ்சி போனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…

14 மணி நேரங்கள் ago

திருமணமாகி 6 நாள் தான் ஆச்சு.. அதற்குள் கணவருடன் மருத்துவமனைக்கு வந்த நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…

15 மணி நேரங்கள் ago