#image_title
பிரபல நடிகர் ஆன கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 2013-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கடல் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு என்னமோ ஏதோ படத்தில் நடித்தார்.
பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரிலீசான வை ராஜா வை படத்திலும் கௌதம் கார்த்திக் நடித்தார். இதனை தொடர்ந்து ரங்கூன், இவன் தந்திரன், இந்திரஜித், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, தேவராட்டம், ஆனந்தம் விளையாடும் வீடு, பத்து தல உள்ளிட்ட படங்களில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் ஆர்யாவுடன் இணைந்து மிஸ்டர் எக்ஸ் மற்றும் கிரிமினல் உள்ளிட்ட படங்களில் கௌதம் கார்த்திக் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சுமாவும் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது.
பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மிஸ்டர் எக்ஸ் படத்திற்காக கிளீன் ஷேவ் செய்து வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். அதே தோற்றத்துடன் தனது மனைவி மஞ்சுமா மோகனுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் போல கௌதம் கார்த்திக் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…