நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக விளங்குகின்றார். அதன்படி 2026 ஜனவரி 24ஆம் தேதி என்று சூரியன் மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய உள்ளார். இந்நிலையில் சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அவர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். மேல் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். கடின முயற்ச்சி மேல் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். கடந்த கால வேலைகள் அனைத்தும் சிறந்த பலன்களைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க முடியும். நிதி சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். வணிகர்கள் மற்றும் வேலையில் நன்மைகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்:
இந்த ராசிக்காரர்களுக்கு ஆளுமை மேம்படும். எதிரிகளை வீழ்த்துவதற்கான நேரம் கூடி வரும். பண ஆதாயங்கள் தேடி வரும். வேலையில் சரியான லாபத்தை பெறலாம். வணிகர்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்ட முடியும். வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லலாம். பணியாற்றும் இடத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சிறந்த நேரம். குடும்ப வாழ்க்கையிலும் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும்.
கன்னி
கன்னி ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரிய பகவான் அமர்வதால் படைப்பாற்றல் அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் வரும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஏற்படும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால் உங்கள் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். தலைமைத்துவ பண்பு வெளிப்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல நேரமாகும். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான காலம் நெருங்கியுள்ளது. நீங்கள் தொடங்கும் எந்த செயலும் வெற்றியில் முடியும். ஜனவரி மாத இறுதியில் புதிய உயரங்களை தொடுவீர்கள்.
ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில், 36 வயதான அனு மீனா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவரின் கொடூரமான…
படத்திலுள்ள செய்தியின்படி, 3 அதிமுக (ADMK) சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்.…
பெங்களூருவில் 74 வயதான ஓய்வுபெற்ற பெண் ஆசிரியை லட்சுமி ராமமூர்த்தி என்பவரை, இணையவழி குற்றவாளிகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள்…
அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக இந்த செய்தி கூறுகிறது. அவ்வாறு ராஜினாமா…
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது பெரும்பான்மை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போது,…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) தங்களது பதவிகளை…