சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் கங்குவா. மன்னர் கால கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா அக்டோபர் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் வேட்டையன் பட குழுவினர் வேட்டையன் படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவித்தனர்.
இப்படியான நிலையில் மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவில்லை என்று கூறினார். அன்றைய காலத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்க தொடங்கியவர், 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடியவர் என சூப்பர் ஸ்டார் ரஜினியை புகழ்ந்தார்.
இத்தகைய புகழுக்குரிய ரஜினி அவர்களின் வேட்டையன் படமும் அக்டோபர் 10 ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டாருக்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும். கங்கு வா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ அப்போதுதான் அதன் பிறந்தநாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீர்கள் என்று நம்புகிறேன் என பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சூர்யா மிரள வைத்தார்.
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…
காட்டுப் பகுதிக்கு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகெங்கும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், அது எதிர்காலத்தில் மனித…
சிறப்பு லட்சுமி பூஜை செய்தால் கோடி கோடியாகப் பணம் கிடைக்கும் என ஆசை காட்டி, ஏழைக் குடும்பத்து இளம்பெண்களைப் பாலியல்…