முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செம்மலையின் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் விரைவில்அதிமுகவில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றத்தில் சில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், தனது செல்வாக்கை அங்கே மீண்டும் நிரூபிக்கும் நோக்கில் செம்மலை இந்த நடவடிக்கையில் தீவிரமகா ஈடுபட்டு வருகிறார். சொந்த மாவட்டத்திலேயே நடக்கும் இந்த உட்கட்சி மாறுதல் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு புதிய அரசியல் சவாலாகவும் தலைவலியாகவும் உருவெடுத்துள்ளது.
அதேவேளையில், இச்சம்பவம் குறித்து அதிமுக தரப்பில் வேறுவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. செம்மலைக்குக் களத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவிலான ஆதரவு வட்டம் எதுவும் இல்லை என்றும், அவரது நகர்வுகள் கட்சிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தனது அரசியல் வாரிசான மகன் எழில் அமுதனின் எதிர்காலத்தையும் அரசியல் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டே, அவர் தவெக-வில் இணைந்ததாக அதிமுக தரப்பினர் கூறி வருகின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் இதயம் தொடர்பான கடுமையான…
சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் கீழ் இயங்கும் அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள…
டெல்லி-டேராடூன் அதிவேக நெடுஞ்சாலையில், உத்திரப் பிரதேசத்தின் பாக்பத் பகுதியில் சாலை ஓரத்தில் நட்டப்பட்டிருந்த செடியை நபர் ஒருவர் திருடிச் செல்லும்…
மேட்சல் பகுதியில் உள்ள சாய்பாபா நகர் பேருந்து நிறுத்தத்தில் தெலங்கானா மாநில அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகள் சரியாக நிற்பதில்லை…
அவசரகாலத்தில் விமானத்திலிருந்து வெளியேறும்போது பயணப் பைகளைத் தவிர்த்துவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே மிக முக்கியமான கடமையாகும். விமானத்தில் தீ விபத்து…