தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இத்திரைப்படம் வசூலிலும் வரலாறு காணாத சாதனை படைத்து வருகிறது.
சூப்பர் ஸ்டாரின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
ஆனால் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் வெப்சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருப்பதாக சமூக வலைத் தளங்களில் அறிவித்திருந்தார் சௌந்தர்யா.
தற்பொழுது இத்திரைப்படத்தை நௌ ஆபிரகாம் என்பவர் இயக்கவிருப்பதாகவும், இந்த வெப் தொடரில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த், தன்னுடைய அப்பா நடிகர் ரஜினிகாந்திடம் கேங்ஸ் குழுவினருடன் சென்று ஆசி பெற்றுள்ளார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் சௌந்தர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
மதுபானக் கடை ஒன்றில் மது வாங்கச் சென்ற ராஜேஷ் என்பவருக்கும், அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே திடீரென கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடும்பப்…
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக…
கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில், வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த 6 மாத தெருநாய் குட்டியை தந்தை மற்றும் மகன்…
தெருவோரத்தில் பக்கவாதம் தாக்கியது போல நடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், அவருக்கு ஊசி மூலம் சிகிச்சை அளிக்க…
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகம் மற்றும் மாட வீதிகளில், சமீப காலமாகச் சில…