Categories: சினிமா

அது இல்லன்னா சூப்பர் ஸ்டாரை பாக்கவே முடியாது.. கடவுள் அவருக்கு கொடுத்த வரம்.. மனம் திறக்கும் லதா ரஜினி..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு கேரளாவில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலையா கேமியா ரோலில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜெயிலர்  2 படத்திற்கு முன்பு ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. இவ்வாறு கூலி மற்றும் ஜெயிலர் 2 என ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நிலையில் அவரின் அடுத்த படத்தைப் பற்றிய பேச்சுகள் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கப் போகும் அவரின் 173 ஆவது திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.  இப்படியான நிலையில் 74 வயதாகும் ரஜினிகாந்த் இன்னும் அதே ஸ்டைல் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரிடம் இருக்கும் சிறப்பே அவருடைய ஸ்டைல்தான். இது குறித்து அவருடைய மனைவி லதா ஒரு பேட்டியில் பேசி உள்ளார். அதாவது, ஸ்டைலான ரஜினிகாந்த், மிகச் சிறப்பாக நடிக்க கூடிய ரஜினிகாந்த் இதில் உங்களுக்கு பிடித்த ரஜினிகாந்த் யார் என்று லதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், சூப்பர் ஸ்டாரை பொறுத்த வரைக்கும் அவரை தனித்தனியாக பிரிக்க முடியாது. இரண்டும் கலந்த கலவைதான் சூப்பர் ஸ்டார். அவர் ஒரு நேச்சுரல் ஆர்டிஸ்ட். எதையும் கற்றுக் கொண்டவரோ அல்லது தன்னை நடிகராக மாற்றிக் கொண்டவரோ கிடையாது. அவர் எதை செய்தாலும் அதில் ஒரு இயற்கையான வெளிப்பாடு இருக்கும். அவருக்குள்ளே ஒரு அற்புதமான நடிகர் எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பார். அவர் எந்த படம் பண்ணாலும் அதில் ஒரு தனித்துவம் தெரிய வேண்டும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்வார். நடிப்பில் என்னதான் அசத்தாலும் ஸ்டைல் இல்லாமல் அவரை பார்க்கவே முடியாது. காளியாக வந்தால் கூட அதில் ஒரு ஸ்டைல் இருக்கும். இந்த ஸ்டைல் இறைவன் அவருக்கு கொடுத்த வரம் என்று லதா ரஜினிகாந்த் தந்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

3 minutes ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

5 minutes ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

9 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

12 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

24 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

27 minutes ago