தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தலைவரின் ‘ஜெயிலர்’ திரைப்படம், வெளியாகி வசூல் 600 கோடியை கடந்து சாதனை படைத்தது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல்வேறு முறையில் கொண்டாடியது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தலைவர் 171 திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த், தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை பற்றிய அப்டைட்களும் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுமட்டுமின்றி தனது மகள் இயக்கம் லால் சலாம் படத்திலும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படி சினிமாவில் இன்னும் பிஸியாகவே இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்பொழுது இணையத்தில் சூப்பர் ஸ்டாரை போலவே இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ வெளியாகி படுவைரலாகி வருகிறது. அவர் அச்சு அசலாக பார்ப்பதற்கு ரஜினியை போலவே இருக்கிறார். இதைப்பார்க்கும் நமக்கும் கூட இந்த confusion வரத்தான் செய்கிறது. இதோ அந்த வீடியோ…
நார்வே நாட்டின் போர்சாங்கர் நகராட்சியின் மேயரான ஜோ இங் ஹெஸ்ஜெவிக், குஜராத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி உலா வரும் வீடியோ…
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…