Categories: CINEMA

பேரனின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்… பர்த் டே பார்ட்டில இப்படி ஒரு ஸ்பெஷலா…? இதை யாராச்சும் கவனிசீங்களா..?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். ஐஸ்வர்யா 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் செளந்தர்யா கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

சூப்பர் ஸ்டாரின்மூத்த மகளான ஐஸ்வர்யா கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் ஐஸ்வர்யா , தனுஷ் இருவரும் தற்பொழுது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இளையமகளான செளந்தர்யா கடந்த 2010-ம் ஆண்டு அஸ்வின் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார்.

ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை பிரிந்து  2019ல்  விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் . இந்த ஜோடிக்கு 2022ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் விழாவை தடபுடலாக கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான டர்ப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தன்னுடைய மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி உள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த். இதில் ரஜினியின் மனைவி லதா உள்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் தீமில் கொண்டாடப்பட்ட இந்த பர்த்டே பார்ட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

நயன்தாராவை choose பண்ணது தான் நான் பண்ண பெரிய தப்பு.. வருத்தப்பட்டு பேசிய தனுஷ் படம் இயக்குனர்..!

நடிகை நயன்தாராவை வைத்து அந்த படத்தை எடுத்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று பிரபல இயக்குனர் பேசியிருப்பது தற்போது…

8 மணி நேரங்கள் ago

பிரதீப் ரங்கநாதனை வைத்து விட்ட இடத்தை பிடிக்க முயன்ற விக்னேஷ் சிவன்.. கடைசில இப்படி ஆயிடுச்சே..!!

லவ் டுடே படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன்…

8 மணி நேரங்கள் ago

தனது படத்தின் கதாநாயகியை காரில் கடத்தி சென்று திருமணம் செய்த பிரபல நடிகர்.. பிரபலம் சொன்ன சீக்ரெட்..!!

தமிழ் சினிமாவில் தமிழர் நடிக்கும் நடிகைகளை கதாநாயகன் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. ஆனால் 70,…

9 மணி நேரங்கள் ago

தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா..? பிரபலம் சொன்ன தகவல்..!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பொருத்தவரை விலை மதிப்பில்லாத எத்தனையோ பரிசு பொருட்கள் அவரை தேடி வந்துள்ளது. ஆனால் எம்ஜிஆர் கேட்டு வாங்கிய…

9 மணி நேரங்கள் ago

ரொம்ப குட்டியான உடையில்.. கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிகில் பட நடிகை.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை ரெபா மோனிகா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

10 மணி நேரங்கள் ago

என்னப்பா சொல்றிங்க… தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதா..? அஜித் ரசிகர்கள் உண்மையிலே பாவம்பா..

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

10 மணி நேரங்கள் ago