விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகின்றார். போட்டியாளர்கள் யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசுவது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்கு கடந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி ஆக சிவக்குமார், மஞ்சரி, ரானவ், பிரியா மற்றும் வர்ஷினி வெங்கட், ரயான் ஆகிய ஆறு போட்டியாளர்கள் வந்த நிலையில் இந்த முறை ஓபன் ஆக நாமினேசன் நடைபெற்றது. அதில் அருண்பிரசாத், விஷால், சாச்சனா, தீபக், ரஞ்சித், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி மற்றும் முத்துக்குமரன் உள்ளிட்ட 11 பேர் டாமினேட் செய்யப்பட்டனர்.
இந்த வாரம் 6 பேர் வைல்டு கார்டில் உள்ளே வந்திருப்பதால் அவர்களை நாமினேட் செய்ய முடியாது என பிக் பாஸ் அறிவித்துவிட்டார்m அதனால் அவர்கள் ஆறு பேரும் லிஸ்டில் இருந்து தப்பித்து விட்டனர். இந்த நிலையில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சுனிதா வெளியேறினார்.
இதனை தொடர்ந்து தற்போது சுனிதா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சுனிதாவிற்கு ஒரு நாளுக்கு 20000 முதல் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சுனிதா 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஏழு முதல் எட்டு லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…