Categories: சினிமா

மோகனுடன் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்த சுஹாசினி… ஆனா அவர் க்ளோஸ் ஃப்ரண்ட்டாம்…  இது என்ன போங்கா இருக்கே!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களில் தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர் மோகன். பல படங்களில் பாடகராக இவர் தோன்றி நடித்ததால் இவரை ரசிகர்கள் செல்லமாக மைக் மோகன் என்றே அழைத்து வந்தனர்.

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட மோகனை பாலு மகேந்திரா தன்னுடைய கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். அந்த படம் தமிழ் நாட்டிலும் நன்றாக ஓடிய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

அவரின் மூடுபனி, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள்,  நூறாவது நாள், மௌன ராகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெள்ளிவிழாக் கண்டன. அதனால் ரஜினி, கமலுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கினார்.  ஆனால் 90 களுக்குப் பிறகு அவருக்கான மார்க்கெட் குறைய ஆரம்பித்தது. அதனால் 90 களில் இருந்து அவர் அதிகமாக படங்களில் நடிக்கவே இல்லை. இப்போது ஹரா மற்றும் தி கோட் ஆகிய படங்களின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிக்கப் போகிறாரா அல்லது குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கப் போகிறாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் தன்னுடைய ஹரா படத்தின் ப்ரமோஷனுக்காக பல நேர்காணல்களைக் கொடுத்திருந்தார். அதில் ஒன்றில் நடிகை சுஹாசினி அவரை எடுத்த ஒரு நேர்காணலும் அடக்கம்.

அந்த நேர்காணலில் மோகனை தனக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொள்ளும் விதமாக பேசியிருந்தார். அப்போது “மோகன் மற்றும் பூர்ணிமா ஜெயராமன் நடிப்பில் உருவான கிளிஞ்சல்கள் பட வாய்ப்பு எனக்குதான் முதலில் வந்தது. ஆனால் அதில் நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன். அதற்குக் காரணம் அந்த படத்தில் நெருக்கமானக் காட்சிகள் இருந்தன” என சொல்லியிருந்தார்.

இதைக் கேட்ட மோகன் “இது என்ன போங்கா இருக்கு. அது நெருக்கமான காட்சி,,. டிஸ்டன்ஸான காட்சி. படத்தில் நடிக்க சொன்னால் நடிக்க வேண்டியதுதானே…” என அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

vinoth

Recent Posts

ஊழலுக்கு செக்…. அரசு ஊழியர்கள் சொத்து கணக்கைக் காட்ட கெடு…. தவறினால் பதவி உயர்வு அம்பேல்…. தமிழக அரசு போட்ட உத்தரவு….!

தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யவும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் சொத்து…

13 minutes ago

“DMK தனி மரம்? கூட்டணியே இல்லாம ஜெயிப்போமா?”…. மூத்த பத்திரிகையாளர் மணி கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்த கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…

16 minutes ago

“ராகுலுக்கு ‘நோ’.. மோடிக்கு ‘எஸ்’…. கதர் சட்டைகளை கதறவிட்ட விஜய்”…. அலறும் காங்கிரஸ் வட்டாரம்…. மாறும் கூட்டணி கணக்கு….!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பெரிய திருப்பம் உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், சென்னைக்கு வரவுள்ள…

25 minutes ago

“ஒரே ஒரு தீர்ப்பு… ஒட்டுமொத்தமாக மாறிய கதை”….. முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு வந்த திடீர் சிக்கல்?…. சென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு…!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல்வர் விஜய், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில்…

31 minutes ago

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்… திரையுலகம் சோகம்…!!

பிரபல பாலிவுட் நடிகரும் சமூக சேவகருமான நானா படேகர் (75) கோவாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தனது இயல்பான…

37 minutes ago