ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த 42 வயதான எல்லெனி ஜமால் என்ற மூன்று பிள்ளைகளின் தாய், வழக்கம்போல் வேலைக்குச் சென்ற இடத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Camilla போன்ற பிரபல ஃபேஷன் பிராண்டுகளின் விளம்பரப் பிரச்சாரங்களில் படைப்பு இயக்குநராக பணியாற்றி வந்த இவருக்கு, பணியின் போது திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டு சரிந்து விழுந்துள்ளார்.
முன்னதாகவே தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், வந்து அழைத்துச் செல்லுமாறும் தனது கணவருக்கு அவர் தகவல் தெரிவித்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரது கணவர் முதலுதவி அளித்த போதிலும், எல்லெனியின் நிலை மோசமடைந்ததால் உடனடியாக சிட்னி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எல்லெனி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
இறப்பைத் தொடர்ந்து, எல்லெனியின் கணவரின் இஸ்லாமிய வழக்கப்படி லக்கேம்பா மசூதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று ரூக்வுட் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. திறமைவாய்ந்த ஒரு ஃபேஷன் கலைஞர் வேலையிடத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…