பள்ளிக் கழிவறை ஒன்றில் இரண்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் மிக மோசமாகத் தாக்கி மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவி மற்றொருவரின் பெயரை வினவியபோது தொடங்கிய சாதாரண வாக்குவாதம், அடுத்த சில நொடிகளிலேயே தந்தை மற்றும் சகோதரரை இழுத்து அநாகரீகமாகத் திட்டும் நிலைக்குச் சென்றது. “உன் அப்பாவுக்குத் தெரியும்”, “என் தம்பியைப் பற்றி பேசாதே” எனத் தனிப்பட்ட முறையில் வசைபாடிக்கொண்ட அவர்கள், ஆத்திரத்தில் சரமாரியாக அறைந்துகொண்டும், சட்டையைப் பிடித்து இழுத்தும் சண்டையிட்டனர். இதனை அங்கிருந்த மற்றொருவர் ரகசியமாகப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த மோதல் எங்கு, எப்போது நடந்தது என்ற விவரம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், மாணவர்களின் இத்தகைய நடத்தை சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இணையவாசிகள் பலர் இந்தச் சம்பவத்தை ஒரு தீவிரமான பிரச்சினையாகப் பார்க்காமல், கேலி செய்தும் மீம்ஸ்களாகப் பகிர்ந்தும் வருகின்றனர். “பெண் குழந்தைகள் படித்தால்தான் இப்படிச் சண்டையிடுவார்கள்” என்பது போன்ற கிண்டலான கமெண்ட்டுகள் குவிகின்றன. பள்ளி வளாகத்திற்குள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டிய மாணவிகள், பொதுவெளியில் இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவது கல்வி நிலையங்களின் பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 85 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக,…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது, அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அரசியல் களம் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கித் திரும்பியுள்ளது. இதுவரை…
90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நடிகை தேவயானி, இயக்குநர் ராஜகுமாரனை மணந்ததன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பழைய…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் தற்போது உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம்…
நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்ற கணக்கீட்டிலேயே நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால்,…