சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோதும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் ஒரு மாணவன் சக மாணவனை ஆக்ரோஷமாகத் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர்களுக்கே பயப்படாமல் அராஜகத்தில் ஈடுபடும் இத்தகைய சம்பவங்கள் வைரலாகி வரும் நிலையில், பள்ளித் கல்வித்துறை உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்களிடம் பெருகிவரும் இந்த ஒழுக்கச் சீர்கேட்டிற்குப் பெற்றோர்களின் மிதமிஞ்சிய செல்லம், கண்டிப்பில்லாத வளர்ப்பு மற்றும் சமூக வலைதளங்களின் தவறான தாக்கங்களே முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிப்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளும், தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்களையே பெற்றோர்கள் நேரில் வந்து மிரட்டும் போக்கும், மாணவர்களிடம் பயத்தையும் ஒழுக்கத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களைக் குற்றச் செயல்களை நோக்கி எளிதாகத் தள்ளிவிடுகின்றன.
https://www.instagram.com/reel/Db8WGW_AEpB/?utm_source=ig_web_button_share_sheet
கல்விக்கூடங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கும் இடங்களாக மாறி, தவறு செய்யும் மாணவர்களை அடித்து திருத்தும் கண்டிப்புடன் வளர்த்தால் மட்டுமே எதிர்காலச் சமுதாயத்தைச் சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் பெற்றோரின் மனவேதனையை உணர்ந்து, இத்தகைய வழிதவறும் சிறுவர்களை ஆரம்பத்திலேயே நல்வழிப்படுத்தத் தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் நாடு கடுமையான குற்றவாளிகளுக்கு இடையே வாழவேண்டிய அவலநிலை ஏற்படும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…