திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் சொக்கநாதர். இவர் தாராபுரத்தில் நில அளவையாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு காருண்யா ஸ்ரீதர்ஷினி(19) என்ற மகள் உள்ளார். 12 ஆம் வகுப்பு படித்து முடித்த தர்ஷினி மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு நீட் தேர்வை எழுதினார். 228 மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீதர்ஷினிக்கு முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை.
ஆனாலும் மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தர்ஷினி நீட் தேர்வில் தான் பெற்ற மதிப்பெண்களை 456 என மாற்றி போலியாக சான்றிதழ் தயாரித்துள்ளார். அது மட்டுமில்லாமல் திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு கிடைத்ததற்கான சான்றிதழையும் போலியாக தயாரித்துள்ளார். பின்னர் ஸ்ரீதர்ஷினிக்கு மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கிய போது சென்னை மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு மாணவர் சேர்க்கை விவரங்கள் அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஸ்ரீதர்ஷினி போலியாக சான்றிதழ்களை தயாரித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி தர்ஷினி, அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் என மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…