சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் வகையில் உள்ளது. ஓர் அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர் தனது இருக்கையில் அமர்ந்து வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அங்கு வரும் சக ஆண் ஊழியர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்கிறார்.
மேலும் அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றும், அந்த நபர் வலுக்கட்டாயமாகப் பெண்ணின் முகத்திற்கு அருகில் சென்று முத்தமிட முயல்வது கேமராவில் பதிவாகியுள்ளது. “கேமராவை உடைத்துவிடுவேன்” என்று அந்தப் பெண் எச்சரித்த போதிலும், அந்த நபர் சிறிதும் அச்சமின்றி அநாகரீகமாக நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“>
இதனால் நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் உணர்த்துவதாகப் பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் “இப்படிப்பட்ட நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும், அலுவலகச் சூழலில் பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு மற்றும் மரியாதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் இத்தகைய செயல்கள் சமூகத்தில் இன்னும் தொடர்வது கவலையளிப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…