சுரத்தின் திண்டோலி பகுதியில் உள்ள சானியா-எக்லெரா சௌக் அருகே வியாழக்கிழமை அன்று பள்ளி வேன் ஓட்டுநர் ஒருவர் தெருநாயால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தை ஒன்றை பள்ளி வேனில் ஏற்றுவதற்கு ஓட்டுநர் உதவி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த தெருநாய் அவரைத் தாக்கியுள்ளது. இதில் அவருடைய கைகள் மற்றும் கால்களில் கடிபட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதில், பள்ளி வேன் அருகே குழந்தைக்கு ஓட்டுநர் உதவும்போது நாய் அவரைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
https://twitter.com/HateDetectors/status/2103801769998598383/video/1
இந்தத் தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லை குறித்த கவலையையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…