“ICU-ல சேருவதற்கு முன் உங்ககிட்ட அனுமதி கேட்கணுமா” பாலிசி எடுக்கும்போது ஒரு பேச்சு.. கிளைம் கேட்கும்போது ஒரு பேச்சா..? ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தால் வெடித்த சர்ச்சை.. பெண் வெளியிட்ட வைரல் வீடியோ..!!

Spread the love

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்த பெண் ஒருவருக்குக் சிறுநீரகத் தொற்று (Kidney Infection) ஏற்பட்டு, கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் நடுக்கத்தால் பாதிக்கப்பட்டார். நிலைமை மோசமடைந்ததால் அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதற்கான சிகிச்சைத் தொகையை (Claim) காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டபோது, “நீங்கள் மாத்திரைகள் மூலமே குணமடைந்திருக்க முடியும், எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டீர்கள்?” என்று கூறி நிறுவனம் கிளைமை நிராகரித்துள்ளது. பாலிசி விற்கும்போது “கேஷ்லெஸ், டென்ஷன் ஃப்ரீ” என்று வாக்குறுதி அளிக்கும் நிறுவனங்கள், இக்கட்டான நேரத்தில் இவ்வாறு பதில் சொல்வது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஒரு நோயாளிக்கு மருத்துவமனையில் அனுமதி தேவையா இல்லையா என்பதை சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தீர்மானிப்பாரா அல்லது ஏர் கண்டிஷன் அறையில் அமர்ந்திருக்கும் இன்சூரன்ஸ் அதிகாரிகளா என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. “இனி ஐசியூ-வில் சேருவதற்கு முன்புகூட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அனுமதி வாங்க வேண்டுமா?” என்று நெட்டிசன்கள் கிண்டலாகவும் கோபமாகவும் கேள்வி எழுப்புகின்றனர். நோயைக் குணப்படுத்தக் காப்பீடு வழங்குகிறார்களா அல்லது கிளைமை நிராகரிக்கக் காரணங்களைத் தேடுகிறார்களா என்ற இந்த விவாதம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்த பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

3 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

7 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

9 minutes ago

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

11 minutes ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

12 minutes ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

16 minutes ago