தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் யாரும் எதிர்பாராத பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட திமுக தற்பொழுது தோல்வியைச் சந்தித்துள்ளதோடு, அதன் வலுவான கூட்டணிகளும் உடைந்து சிதறியுள்ளன. இந்தத் தொடர் சறுக்கல்களால் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையிலும், திமுக தலைமை இந்தத் தோல்வியிலிருந்து முறையான பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்கிற குமுறல் அக்கட்சியினரிடையே பலத்த குரலாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் தற்போதும் அலட்சியமாகவே செயல்பட்டு வருவதாக உடன்பிறப்புகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக மு.க.ஸ்டாலின் அமைத்த கள ஆய்வுக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்த ஆய்வின் போது, மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக அரங்கேறிய உட்கட்சி பஞ்சாயத்துகள், வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் சொதப்பல்கள், அமைச்சர்களின் பின்னணி மற்றும் கடைசி நேரத்தில் தேர்தல் நிதி முறையாகப் போய்ச் சேராமல் சுருட்டப்பட்டது போன்ற பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும், இத்தகைய கள நிலவரங்களை அறிந்து கொள்வதற்காக அண்மையில் அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தி தொடர்பாளர்கள் கூட்டமானது வெறும் கண்துடைப்பாகவே முடிந்தது என்று நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆட்சியில் இருந்தபோது தங்களைச் சந்திக்கவே வராத தலைமை, தோல்விக்குப் பிறகு தங்களை அழைத்துப் பேசியதால் மனம் விட்டுப் பேசலாம் என்று வந்த நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தனக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை மட்டுமே சம்பிரதாயமாகப் படித்தாரே தவிர, கட்சியின் உண்மையான நிலவரம் குறித்து ஆழமாக விவாதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கட்சியின் பலமே அதன் “கள அரசியல்” தான், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியபோது, அதற்குப் பதிலளித்த உதயநிதி, “விஜய் என்ன கள அரசியல் செய்தா முதலமைச்சரானார், பிரச்சினைகள் சார்ந்த அரசியல் செய்தால் போதும்” என்று கூறி நிர்வாகிகளின் கருத்துகளை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளியதாகத் தெரிகிறது.
ஊடகங்களை கையாள்வதில் கோட்டை விட்டது மற்றும் கடந்த காலங்களில் ‘பென்’ நிறுவனம் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டியும் தலைமை பாடம் கற்றதாகத் தெரியவில்லை. ஊடக ஒருங்கிணைப்புக்காகப் புதிதாக அமைக்கப்பட்ட பரந்தாமன், அபிசுல்லா, சூர்யா கிருஷ்ணமூர்த்தி அடங்கிய குழு இதுவரை ஒரு வாட்ஸ்அப் குழுவைக் கூடத் தொடங்கவில்லை என்றும், கடந்த காலத்தில் சொதப்பிய அதே நபர்களிடமே மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் சோகத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் இதே அலட்சியப் போக்கு நீடித்தால், திமுக எப்படி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும் என்ற கேள்வி தற்போது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை எழுந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…