“எங்கே ஒளிஞ்சிட்டு இருக்காரு CM சார்?”… மன்னிப்பு கேட்கக் கூட மனசில்லையா?….. முதல்வர் விஜய்யை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் வெற்றியைத் தகர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரியணையைக் கைப்பற்றியது இந்திய அரசியலையே உற்றுநோக்க வைத்திருக்கிறது. கட்சித் தொடங்கிய நாளிலிருந்தே திமுகவை “தீய சக்தி” என நேரடியாகச் சாடிய விஜய், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது பெரிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாகவும், அதிமுக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்ட இந்த புதிய சூழலில், தமிழக அரசியலின் களம் முன்னெப்போதையும் விட மிகவும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் மரணங்கள் புதிய தவெக. அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. சட்டம் – ஒழுங்கு குறித்த கேள்விகள் வலுத்து வரும் சூழலில், மக்கள் மத்தியில் எழும் அதிருப்தியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியின் அமைதியும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் மௌனமும் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இப்பிரச்சினையை முன்வைத்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக விமரிசித்துள்ளார். “எதிர்க்கட்சியாக இருக்கும் போது, ‘Sorry சொன்னால் போதுமா?’ என என்னைப் பார்த்துக் கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்? Accountability, Apology போன்றவை முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளா?” என கேள்வி எழுப்பியுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத த.வெ.க. அரசுக்குத் தனது வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். ஆளுங்கட்சியாக மாறிய பிறகு சந்திக்கும் முதல் மிகப்பெரிய சவாலை விஜய் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

1 மணத்தியாலம் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

2 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

3 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

3 மணத்தியாலங்கள் ago