2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்களில் அதிரடியான மாற்றங்களைக் கையாண்டு வருகிறது. பொதுவாகத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிகாரப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை திமுக தரப்பில் இன்னும் முறையான குழு அமைக்கப்படாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகத் தந்திரமான மற்றும் விரைவான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக சார்பில் அதிகாரப்பூர்வக் குழு இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், கட்சியின் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ரகசியமாகவும் நேரடியாகவும் பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகள் கூடுதல் தொகுதிகளைக் கோரி வரும் நிலையில், அவர்களைச் சமாதானப்படுத்தி சுமூகமான உடன்பாட்டிற்கு வர அமைச்சர்கள் குழு தீவிரம் காட்டி வருகிறது. விசிக தரப்பில் 10 தொகுதிகள் வரை கேட்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் மூலம் இழுபறிகளைத் தவிர்க்க திமுக திட்டமிட்டுள்ளது.
இந்தத் தாமதத்திற்குப் பின்னால் ஒரு நுட்பமான அரசியல் கணக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம் கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தும் அதே வேளையில், மறுபுறம் புதிதாகக் கூட்டணிக்குள் இணைய வாய்ப்புள்ள கட்சிகளுடன் திமுக தலைமை திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. அனைத்துக் கட்சிகளும் இறுதி செய்யப்பட்ட பின்னரே குழுவை அறிவிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், குழு அமைக்கப்பட்டவுடன் மிகக் குறுகிய காலத்திலேயே, அதாவது வெறும் மூன்று நாட்களுக்குள் அனைத்து உடன்படிக்கைகளிலும் கையெழுத்திட்டு பணிகளை முடிக்க திமுக இலக்கு நிர்ணயித்துள்ளது.
திமுகவின் இந்த “மெகா பிளான்” படி, பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டு விவரங்கள் அனைத்தையும் இறுதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மார்ச் 1-ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் குறித்த மிக முக்கியமான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திமுக தலைமை ஆயத்தமாகி வருகிறது. இந்த அதிரடி நகர்வுகள் அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…