மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 731 ஸ்டெனோகிராபர் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.08.2026 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்குத் தொடக்க ஊதியமாக ரூ.35,400 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்குத் தகுதியுள்ளவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் மே 15, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்சி/எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்துத் திறன் தேர்வு (Skill Test) ஆகிய இரண்டு நிலைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…