#image_title
தமிழில் இயக்குனர் சசி இயக்கிய ரோஜா கூட்டம் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதும் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். அடுத்து அவர் நடிப்பில் உருவான ஏப்ரல் மாதத்தில் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய திரைப்படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆனால் அதன் பிறகு தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியைப் பெற்றுத் தருவதில்லை. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவர் தெலுங்கில் சில படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
எதுவும் வொர்க் அவுட் ஆகாததால் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார். இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள சத்தமின்றி முத்தம் தா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படமாவது அவருக்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் வளர்ந்து வந்த போது அவருக்கு சில நல்ல படங்களின் வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படங்களை மிஸ் செய்துள்ளார். அதில் ஆயுத எழுத்து, டிஷ்யும், எம் குமரன், நான் கடவுள் என சில ஹிட் படங்களும் அடக்கம். இதில் ஆயுத எழுத்து படத்தில் தன்னால் ஏன் நடிக்க முடியவில்லை என்பது குறித்து ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.
அதில் “ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் வேடத்தில் நடிக்க மணிரத்னம் சார் என்னைதான் தேர்வு செய்தார். ஆனால் அப்போது நான் வேறொரு படத்தில் நடித்துவந்தேன். அந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது. அந்த படத்தின் தயாரிப்பாளர் “என் படத்தை முடித்துவிட்டு வேறு எந்த படத்திலும் நடிக்க வேண்டும்” என என்னை மிரட்டினார். இதனால் என்னால் ஆயுத எழுத்து படத்தின் ஷூட்டிங் செல்ல முடியவில்லை. அதனால் என் மேல் கோபமான மணிரத்னம் சார் என்னை நீக்கிவிட்டு சித்தார்த்தை நடிக்கவைத்தார்” என வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…