சின்னத்திரையில் சரிகமப நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கையை சேர்ந்த சினேகா என்பவர். அங்கு ஏற்கனவே ஒரு தனியார் தொலைக்காட்சியில் பாடி கொண்டிருந்தபோது வசதியான குழந்தை போலவே உடைகள் மற்றும் மணிகலன்கள் அணிந்திருந்தார். ஆனால் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்து வரும் குழந்தை போல கழுத்தில் ருத்ராட்சை மாலை, கையில் கண்ணாடி, பழைய பாவாடை சட்டை போன்ற உடைகளை உடுத்தி பாடிக்கொண்டிருக்கிறார்.
இதனால் ஜீ தமிழ் டிஆர்பிக்காக சினேகாவை இப்படி மாற்றிவிட்டார்கள் என விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சினேகாவின் பெற்றோர் இலங்கையில் தனியார் தொலைக்காட்சியை சேனலுக்கு கண்ணீருடன் பேட்டியளித்துள்ளனர். அதில், என்னுடைய மகள் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்று உள்ளார். அங்கு என் மகளை தவறாக பேசுகிறார்கள். நாங்கள் மிகவும் வசதியானவர்கள் கிடையாது. இன்னைக்கும் அடுத்தவர்கள் வீட்டில் பாத்திரம் கழுவும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறோம். கூலி வேலைக்கும் குறைவான வேலை தான் செய்து கொண்டிருக்கிறோம்.
என் பிள்ளை இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரை அங்கு அழகாக காட்ட வேண்டும் என்பதற்காக அவர்களே உடை வாங்கி கொடுத்து நகைகளும் ஊக்க பொருட்களும் வாங்கி கொடுத்தனர். பேருந்துக்கு கூட அவர்கள்தான் பணம் கொடுத்து அனுப்புவார்கள். அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் என் மகள் அப்படி கலந்து கொண்டார். எங்களுடைய குடும்பம் இன்றும் கஷ்டத்தில் தான் இருக்கிறது.
என் பிள்ளைகளுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளில் கொடுக்கும் சாப்பாட்டை அவர்கள் எங்களுக்கு கொண்டுவந்து கொடுத்திருக்கிறார்கள். அப்படித்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் நிஜ நிலைமை என்னவோ அப்படிதான் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் என் மகள் கலந்து கொண்டார். அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவளுடைய திறமைக்கு அவளாவது நல்லா இருக்கட்டும் என்று அந்த பேட்டியில் சினேகாவின் பெற்றோர் கண்ணீருடன் பேசியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…