நான் யாருக்கும் அடிபணிய மாட்டேன்… துண்டு சீட்டு சர்ச்சைக்கு… சபாநாயகர் பிரபாகர் கொடுத்த அதிரடி பதில்… சட்டசபையில் நடந்த சம்பவம்…!

Spread the love

சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக திமுகவினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக, சபாநாயகருக்கு வந்த ஒரு துண்டு சீட்டைப் பார்த்த பிறகே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுகவினர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இக்குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தான் எந்த துண்டு சீட்டிற்கும் அடிபணிய மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவையில் சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான விவாதங்கள் எந்த ஆண்டு நடைபெற்றது என்பதற்கான குறிப்புகளை சட்டமன்ற அதிகாரிகளிடமிருந்து பெறவே அந்த துண்டு சீட்டு பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், சபையை நடத்துவதில் யாருடைய தலையீட்டையும் ஏற்கமாட்டேன் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், புதிய தலைமை செயலகம் பற்றிய விவரங்கள் அரசு அறிவிக்கும் போது மக்கள் மகிழ்ச்சியடைவர் என்றார். மேலும், 4 பேரவை உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கை குறித்து முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாகவும், அடுத்தகட்ட விரிவான நேரடி விசாரணைக்கான தேதி விரைவில் குறிக்கப்படும் என்றும் கூறினார்.

Swetha

Recent Posts

நடுவானில் பாய்ந்த ஏவுகணை…. நடுநடுங்கிய 17 இந்தியர்கள்… ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த கொடூரம்…. கடல் நடுவே பேரதிர்ச்சி….!

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்தே, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ்…

3 minutes ago

“விஜய் vs உதயநிதி…! அவருக்கு தெரியுமா இது?… விஜய்யின் ஆரம்பகால விமர்சனங்கள்… முன்வந்து வாதாடிய உதயநிதி மனைவி… மறுபக்கம் திரும்பிய பழைய வரலாறு…!!

தற்போதைய தமிழ்நாடு அரசியல் களம் நடிகர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சுற்றியே சுழன்று வருகிறது. நடந்து முடிந்த…

3 minutes ago

உக்ரைன் வீசிய ட்ரோன் தாக்குதல்… கருங்கடலில் கதறிய இந்திய மாலுமிகள்… பற்றி எரியும் கச்சா எண்ணெய்…. காத்திருக்கும் பேராபத்து….!

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகக் கடல் வழித்தடமாகத் திகழும் கருங்கடல் பகுதியில், 23 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த…

7 minutes ago

மின்கம்பியில் ஊர்ந்து செல்லும் ராட்சத பாம்பு…. கிட்ட போய் பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சீனாக்காரன் மூளையே மூளை தான்….!

சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் பகுதியில் மின்கம்பிகளில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…

11 minutes ago

30 நாட்கள் கெடு இனி 60 நாட்கள்…. பவர் ஆஃப் அட்டார்னி மூலமாக சொத்து விற்க போறீங்களா?…. பதிவுத் துறையின் புதிய உத்தரவு….!

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பிற பத்திரப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவோ…

16 minutes ago

“ஐயோ குழந்தை!”… அலறிய வேலைக்கார அம்மா… போனை பார்த்த தாய்… தண்ணீருக்குள் தவித்த பிஞ்சு உயிர்… கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!!

பெற்றோர்களின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தகைய பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று…

19 minutes ago