காஞ்சிபுரம் மாவட்டம் காரை ஊராட்சிக்கு உட்பட்ட முருகர் கோவில் தெருவில் வசித்து வரும் தனலட்சுமி (65) என்பவருக்கு செல்லப்பன் (50), துரைசாமி (45) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பெரிய மகனான துரைசாமி அவருடைய வீட்டின் அருகே கறிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து பல வருடங்களுக்கு முன்பு குட்டை புறம்போக்கு பகுதியில் ஒன்றாக சேர்ந்து வீடு கட்டி உள்ளனர். பிறகு அந்த வீடு யாருக்கு சொந்தம் என்று இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். துரைசாமி சிமெண்ட் சீட் போட்ட பெரிய வீட்டிலும், தாய் தனலட்சுமி அருகிலேயே தார்ப்பாய் குடிசையிலும் வசித்து வந்தனர்.
தாய் தனலட்சுமி மற்றும் துரைசாமி வீடுகளுக்கு செல்லப்பன் வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் செல்லப்பன் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அண்ணன் தம்பி இருவரும் ஆடு மாடுகளை வளர்த்து வந்த நிலையில் செல்லப்பன் தன்னுடைய மாடு போட்ட சாணத்தை துரைசாமி வசிக்கும் பகுதியில் கொட்டியுள்ளார். இதனைக் கண்ட துரைசாமி உன் மாடு போடுற சாணத்தை எல்லாம் என் வீட்டு பக்கத்துல கொட்டாதே என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த செல்லப்பன் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் துரைசாமியை தாக்கியுள்ளார். மகன் துரைசாமியை தாக்குவதை பார்த்த தாய் தனலட்சுமி இருவரையும் விலக்கிவிட முயற்சித்தார். அப்போது வீட்டில் ஆட்டுக்கிடாய் வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்த செல்லப்பன் கண்மூடித்தனமாக தன்னுடைய தாயை வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தனலட்சுமி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்தார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு செல்லப்பன் அந்த கத்தியை ஆடு வெட்டிய பிறகு கழுவி வைப்பது போல வீட்டில் பத்திரமாக கழுவி வைத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தனலட்சுமி அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் செல்லப்பனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…