Categories: CINEMA

ஹாப்பி பர்த்டே பட்டு.. காதல் கணவர் சினேகன் பிறந்தநாளுக்கு அவரே எதிர்பார்க்காத கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ண கன்னிகா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக பலம் வரும் கவிஞர் சினேகனின் பிறந்த நாளுக்கு அவரது மனைவி கன்னிகா பரிசு வழங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், கவிஞர் அதைத்தொடர்ந்து அரசியல்வாதி என பண்புகத் தன்மை கொண்டவர் சினேகன். பாடல் ஆசிரியராக இருந்த காலத்தில் பாடல்களை எழுத தொடங்கிய இவர் புத்தம் புதிய பூவே என்ற திரைப்படத்தின் மூலமாக பாடல் ஆசிரியராக அறிமுகமானார். கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து ஆண்டு காலம் உதவியாளராக பணியாற்றி வந்த இவருக்கு பல ஆண்டுகள் கழித்து கிடைத்த வாய்ப்பு தான் புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு .

அதைத்தொடர்ந்து பல பாடல்களை எழுதி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல்களை கொடுத்தவர். ராம் படத்தில் வரும் ஆராரிராரோ, பாண்டவர் பூமியில் அவரவர் வாழ்க்கையில், விருமாண்டி படத்தில் மதுரவீரன் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கின்றார். 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக தேர்தலிலும் போட்டியிட்டார்.

இவரது மனைவி கன்னிகா. 8 வருடம் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகையாகவும் வலம் வந்தார். கே பாலச்சந்திரன் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரிய குறி என்ற சீரியல் மூலமாக அறிமுகமான இவர் வெள்ளித் திரையில் தேவராட்டம் , அடுத்த சாட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை கன்னிகா சினேகனை திருமணம் செய்து கொண்ட பிறகு சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து கொண்டு வருகிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வரும் இவர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் ஓவியம் வரைவது, சமைக்கும் வீடியோக்கள் என அனைத்தையும் நடிகை கன்னிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். இன்று நடிகர் சினேகனுக்கு பிறந்தநாள். இதனால் கன்னிகா தனது காதல் கணவருக்கு அவர் விரும்பிய ஒரு பொருளை பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் கவிஞர் சிநேகனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ப்ளீஸ் இன்னும் ஒரு முறை சொல்றீங்களா..? மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு tvk விஜய் வைத்த 2 முக்கிய கோரிக்கை..

தமிழக வெற்றி கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர்…

25 seconds ago

தொடர்ச்சியாக தோல்வி படங்கள்.. ஆப்பு வைத்த மாமியார்.. விவாகரத்துக்கு இதான் காரணமா இருக்குமோ..?

பிரபல நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.…

17 நிமிடங்கள் ago

நான் சென்னைக்கு வந்ததே உங்கள் மாதிரி நடிகர் ஆகதான் அண்ணே… பாரதிராஜாவின் ஆசையைக் கேட்டு சிவாஜி அடித்த கமெண்ட்!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

50 நிமிடங்கள் ago

ஒரு ஃபங்ஷன்ல வச்சு அந்த பொண்ணு என் கணவர் கிட்ட.. நான் பதில் சொன்ன விதமே வேற.. ஓபனாக பேசிய மின்னல் தீபா..!!

மின்னல் தீபா கடந்த 2000-ஆம் ஆண்டு சூரிய பிரகாஷ் இயக்கிய மாயி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து…

1 மணி நேரம் ago

மருத்துவமனையில் இருந்து விரட்டப்பட்ட காமெடி நடிகர் வெங்கல் ராவ்.. உண்மையில் நடந்தது என்ன..? கண்கலங்கி பேசிய மனைவி..!!

நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ் ஆந்திராவின் விஜயவாடாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர். முதலில் சினிமாவுக்குள் சண்டை கலைஞராக தனது…

1 மணி நேரம் ago

நீ வருவாய் என படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் விலகிய விஜய்… ஏன் தெரியுமா? – பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். திரையில் அவர் வந்தாலே ரசிகர்கள் ஹிஸ்டீரியா…

1 மணி நேரம் ago