நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் வருகிற ஜனவரி 9ம் தேதியும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஜனவரி 10ம் தேதியும் ரிலீஸாக உள்ளது. இதனால் நடிகர் விஜயுடன் நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுமென்றே போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் சிவகார்த்திகேயன் போட்டியாக இப்போது மாறி இருக்கிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் லைகா புரடக்சன் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள சிக்மா படத்தின் டீசர், டிசம்பர் 23ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. அதே நேரத்தில் சரியாக 5 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் அடுத்து உருவாக உள்ள புதிய படத்தின் கிளிம்பஸ் வீடியோவும் வெளியானது.
ஏற்கனவே விஜயோடு மோதும் சிவகார்த்திகேயன் இப்போது விஜய் மகன் ஜேசன் இயக்கிய படத்தின் டீசர் வெளியான அதே நேரத்தில், தனது அடுத்த படத்தின் வீடியோ கிளிம்ப்ஸை வெளியிட்டது சமூக வலைதளங்களில் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்பாவுடன் மட்டுமல்ல மகனுடனும் போட்டி போடுகிறார் சிவகார்த்திகேயன் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…