Categories: சினிமா

சினிமாவால் கிடைத்த அடையாளம்… மன்னராக வாழ்ந்த சிவாஜி கணேசன்…

Spread the love

சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் பிரபலமான புகழ் பெற்ற நடிகராவார். இவரின் முழு பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி என்பதாகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த சிவாஜியின் நடிப்பு திறமையை பார்த்த தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் முதலியார் பல எதிர்ப்பை தாண்டி இவரை பராசக்தி திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவாஜி கணேசன் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரின் திறமையை பார்த்து வியந்த மக்கள் இவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று அழைத்தனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து பிரபலமானார் சிவாஜி கணேசன்.

இவர் தனது வாழ்நாளில் 288 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதில் தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். நல்ல குரல் வளம் தெளிவான உணர்ச்சிபூர்வமான தமிழ் உச்சரிப்பு சிறப்பு நடிப்புத் திறன் ஆகியவை இவரின் தனி சிறப்புகள் ஆகும். இவரை நடிகர் திலகம் நடிப்பு சக்கரவர்த்தி சிம்ம குரலோன் என பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள்.

சரித்திரம் புராணம் குடும்பம் சமூகம் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று திறம்பட நடித்தவர் சிவாஜி கணேசன். இவரை தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என்று அழைத்தனர். சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிகணேசன் அவர்களிடம் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அதுதான் இவரது அடையாளமாகவும் ஆனது. அது என்னவென்றால் அந்த காலத்தில் புராணங்களில் மட்டுமே மன்னர் கதைகளை கேட்டு கற்பனையில் இருந்து வந்தனர் மக்கள். அப்போது மன்னர் வேடமிட்டு சிவாஜி நடிப்பை பார்த்த மக்கள் ஓ மன்னர்கள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ சிவாஜி கணேசன் அவராக இல்லை மன்னராகவே வாழ்ந்திருக்கிறார் என்ற அளவுக்கு புகழ்பெற்றார் சிவாஜி கணேசன்.

admin

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

23 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

27 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

54 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

58 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago