தமிழ் சினிமாவில் நிஜமான இரட்டை எதிர் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் என தொடங்குகிறது. நடிப்பு என்றால் அது சிவாஜி கணேசன் என்று புகழப்பட்டாலும் ரசிகர்களுடைய எண்ணிக்கை என்னவோ எம்.ஜி.ஆருக்கு தான் அதிகம் உள்ளது. சிவாஜி கணேசனுக்கு பலம்பெறும் இயக்குனர் பி ஆர் பந்தலு வரிசையாக பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் மற்றும் கர்ணன் என பல படங்களை வர இயக்கியுள்ளார். ஏதோ சூழ்நிலையால் இயக்குனர் பி ஆர் பந்தலுவிற்கு நிறைய கடன் ஏற்பட்டுள்ளது. இந்த கடன்களில் இருந்து மீள நீங்கள் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் பண்ணுங்க, உங்களுடைய கடன் எல்லாம் தீர்ந்து விடும் என்று அவருக்கு நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
நான் தொடர்ந்து சிவாஜி கணேசனுக்கு படங்கள இயக்கியுள்ளேன், சிவாஜி கணேசன் முகாம் இயக்குனர் என்று நான் பார்க்கப்படுகின்றேன், நான் போய் எப்படி எம்ஜிஆரிடம் வாய்ப்பு கேட்பது அவர் அதற்கு சம்மதிப்பாரா என்று பந்துலு கேட்டுள்ளார். அதற்கு நண்பர்கள் அப்படி இல்லை எம்ஜிஆர் உங்களைப் பற்றி நல்ல மரியாதை வைத்துள்ளார் நீங்கள் போய் பாருங்கள் என்று கூறியுள்ளனர். உடனே பந்துலு எம்.ஜி.ஆருக்கான ஒரு பிரமாதமான கதையை தயார் செய்து விட்டு அவரை சந்தித்து பேசி உள்ளார். அவரைப் பார்த்ததும் எம்ஜிஆருக்கு ஒரே சந்தோசம்.
சிவாஜி கணேசன் படங்களை இயக்கிய மிகப்பெரிய இயக்குனர் தன்னுடைய படங்களை இயக்க வந்ததால் உடனே ஒப்புக்கொண்டதோடு கதையை கேட்டு பிடித்துப் போக இன்னும் சந்தோசம் அடைந்து விட்டார். உடனே நீங்கள் படப்பிடிப்புக்கான வேலையை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார். உடனே பி ஆர் பந்துலு மகிழ்ச்சியுடன் சென்று படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார். அதேசமயம் தன்னுடைய படங்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞர் வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் இயக்குனர் பி ஆர் பந்துலு இயக்கத்தில் நடிக்க உள்ளதை பகிர்ந்துள்ளார்.
மேலும் மகிழ்ச்சியின் உச்சத்தில் கவிஞர் வாலியின் தோளில் கையை போட்டு இறுக்கி அணைத்தபடி எம்ஜிஆர் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பி ஆர் பந்தலு இயக்கத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கவிஞர் வாலி மூன்று பாடல்களை எழுத படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…