தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் விடுமுறை தினமான நேற்று, தந்தை தனது இரண்டு மகள்களையும் விவசாயத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பெற்றோர் சற்று தொலைவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், குழந்தைகள் இருவரும் அருகில் இருந்த ரஹீம் கிணற்றைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 4 வயதான எம்.டி. ஆசியா என்ற சிறுமி தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த 18 வயதான அக்கா எம்.டி. சம்யுக், தனது தங்கையைக் காப்பாற்றுவதற்காக யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக இருவராலும் நீந்த முடியாமல் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலிஸார் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முலுகு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் முலுகு மாவட்டம் பஸ்ரா - தத்வாய் வனப்பகுதி சோதனைச் சாவடி அருகே, அசுர வேகத்தில் வந்த மணல் லாரி…
மும்பை நேரு நகர் பகுதியில் உள்ள மாஸ் மெட்ரோபோலிஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் நடந்த பிறந்தநாள் விழாவை…
பல வருட காத்திருப்புக்குப் பிறகு தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், தந்தை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான…
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ஹிமாஸ்ரீ போரோ என்ற கல்லூரி மாணவியும் நடனக் கலைஞருமான இளம்பெண், ஆந்திராவில் நடைபெற்ற நடன…
உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்திற்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் குறிவைத்து, அங்குள்ள குரங்குகள் ஒரு விசித்திரமான 'பிளாக்மெயில்' பிசினஸை…
கண்டோன்மென்ட் வாரியத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கொடூரமாகத் தாக்குதல் நடத்திய…