#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும் மீனாவிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது.
இந்த சீரியலில் கடந்த வாரம் ஸ்ருதி மற்றும் ரோகிணியின் தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது .இதில் வேண்டுமென்றே முத்துவை வம்புக்கு இழுக்க ரோகினியும், ஸ்ருதி அம்மாவும் முயற்சி செய்தனர். அவர்களது திட்டமெல்லாம் வீணாகப் போக, இறுதியாக மீனாவின் மீது திருட்டுப் பழியை ஸ்ருதியின் அப்பா போட்டார். இதனால் கடுப்பான முத்து ஸ்ருதியின் அப்பாவை அடிக்க, ஸ்ருதி வீட்டிற்கு வர மாட்டேன் என கூறி தனது அப்பா வீட்டில் தங்கி உள்ளார்.
ரவி தனது ரெஸ்டாரண்டில் சென்று தங்கி உள்ளார். ரவியை பிரிந்த சோகத்தில் அவர் அப்பா உள்ள நிலையில், முத்துவும் மீனாவும் இந்த நிலைமையை முயற்சி செய்ய போராடி வருகின்றனர். முத்து சென்று ரவியிடமும், மீனா சென்று ஸ்ருதியிடமும் நிலைமையை விளக்கி கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து ஸ்ருதி நிலைமையை புரிந்து கொண்ட ஸ்ருதி மாமியார் வீட்டிற்கு செல்ல தயாராகிறார்.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் மனோஜ் , கோயில் வாசலில் பிச்சைகார கோலத்தில் மீனாவிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார். அப்படியே அவரை முத்துவும், மீனாவும் வீட்டிற்கு கொண்டு வந்து அவரது அம்மா விஜயாமுன் நிறுத்தியுள்ளனர். இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த சீரியலில் மனோஜின் மனைவி ரோகிணிக்கு தோழி கதாபாத்திரத்தில் வருபவர் தான் நடிகை ஸ்ருதி நாராயணன். இவர் தனது திறமையான நடிப்பை இந்த சீரியலில் வெளிப்படுத்தியுள்ளார். தற்பொழுது இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டதாக டிகிரியுடன் கூடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய, அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…