#image_title
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகர்களில் ஒருவராக வளம் வருபவர் உன்னி கிருஷ்ணன். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாமல் கர்நாடக இசை கலைஞரும் கூட, கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தன்னுடைய 12 வயதில் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றார். கல்லூரி படிப்பை முடித்தது முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு பாடகராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன்னுடைய இலட்சியத்திற்காக தொழிலை விட்டுவிட்டு இசை துறையில் நுழைந்தார். இவரை இசை உலகிற்கு அழைத்து வந்தவர் ஏஆர் ரகுமான். இவர் மூலமாகத்தான் பாடகராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கின்றார்.
இவருடைய பக்தி பாடல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் எல்லாம் வரவேற்கை பெற்றிருக்கும். மேலும் காமராஜர் அரங்கில் நடைபெறும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கூட பல வருடங்களாக உன்னிகிருஷ்ணன் பாடி கொண்டு இருக்கின்றார். திரையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஏன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இவருக்கு கலைமாமணி, இசை பேரொளி, இசைச்செல்வம், சங்கீத சக்கரவர்த்தி, சங்கீத கலாசாரதி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டது.
இவர் பிரியா என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் கேரளாவை சேர்ந்தவர், மேலும் பரதநாட்டியம் மற்றும் மோகினி ஆட்டம் போன்றவற்றின் முறையாக பயின்று நடன கலைஞரானவர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். வாசுதேவ கிருஷ்ணன் என்ற மகனும், உத்ரா என்கின்ற மகளும் இருக்கிறார்கள். உத்ரா தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி இருக்கின்றார்.
தேசிய விருதும் வாங்கி இருக்கின்றார். இவரது மகன் வாசுதேவ கிருஷ்ணன் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர் .அத்தோடு மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் உறுப்பினராகவும், தமிழ் கிரிக்கெட் சங்கத்தின் வாழ்க்கை உறுப்பினராகவும் இருந்து வருகின்றா.ர் தந்தையை போல் இசைத்துறையை தேர்ந்தெடுக்காமல் வேறு ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக விளங்கி வருகின்றார்.
இவரது மகனுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று ஆச்சிரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…