Categories: சினிமா

தன் மாயக்குரலால் அனைவருடைய கவலைகளையும் போக்கும்.. பாடகி சித்ராவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் இருக்கா..?

Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகி கே எஸ் சித்ரா. இவரின் முழு பெயர் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா என்பதாகும். இவர் இந்திய பின்னணி பாடகி மற்றும் கர்நாடக இசை கலைஞர் ஆவார். சுமார் 47 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் 25000த்திற்கும் மேல் பாடல்களை பாடி உள்ளார் சித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, மலாய், லத்தீன், அரபு, சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு போன்ற மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் சித்ரா. தனது அசாதாரண குரல் திறமையால் பிரபலமான சித்ரா அவர்களை ‘சின்னக்குயில் சித்ரா’ எனவும் இந்தியாவின் ‘கோல்டன் வாய்ஸ்’ எனவும் அழைக்கப்படுகிறார். இது தவிர இந்திய சினிமாவின் ‘மெல்லிசை ராணி’, ‘லிட்டில் நைட்டிங்கேல்’ எனவும் அழைக்கப்படுகிறார். இந்திய சினிமாவில் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் சித்ரா.

 

சித்ரா ஆறு தேசிய திரைப்பட விருதுகள், 10 பிலிம்பேர் விருதுகள், 16 கேரள மாநில திரைப்பட விருதுகள், 11 ஆந்திர பிரதேச மாநில திரைப்பட விருதுகள், நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் போன்ற இந்தியாவின் 6 மாநிலங்களில் இருந்து 36 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மேலும் மூன்று கர்நாடக மாநில திரைப்பட விருதுகள், ஒரு ஒரிசா மாநில திரைப்பட விருது, ஒரு மேற்கு வங்க மாநில திரைப்பட விருது, இந்தியாவின் உயர்ந்த குடிமகன் விருதுகள் ஆன ‘பத்மபூஷன்’, ‘பத்மஸ்ரீ’ ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார் பின்னணி பாடகி சித்ரா.

1979 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் பாடகியாக அறிமுகமான சித்ரா அன்றிலிருந்து இன்று வரை இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தற்போது 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக பண்ணியாற்றி பல இளம் பாடகர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறவர் சித்ரா. அனைவரின் மனதை மயக்கும் இவரது பாடல்கள் அப்படியே காதிற்குள் சென்று மனதை ஊடுருவி லேசாக்கும். வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் பின்னணி பாடகி சித்ரா.

இப்படி தன்னுடைய மாயக்குரலால் பலருடைய சோகங்களையும் கவலைகளையும் போக்கும் சித்ராவின் வாழ்க்கையில் பெரும் துயரம் சூழ்ந்து இருக்கிறது. அதாவது சித்ராவிற்கு திருமணம் ஆகி கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு நந்தனா என்று அழகிய பொம்மை போன்ற ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. 15 வருடங்களுக்கு பிறந்த மகளை பொத்தி பொத்தி வளர்த்து வந்த நிலையில் அந்த குழந்தை ஆட்டிசம் பாதிக்கப்பட்டிருந்தது. சித்ரா அந்த குழந்தையின் மீது அதிகமான அன்பு வைத்திருந்த நிலையில் தான் எங்கு சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வாராம்.

அப்படிதான் 2011 ஆம் ஆண்டு துபாயில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது தன்னுடைய மகளையும் அவர் அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது நந்தனா அங்குள்ள செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய ஒரே மகளை இழந்த சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் அதனை மறைத்துக் கொண்டு போலியாக நம்முடைய கவலைகளைப் போக்க சிரித்துக்கொண்டே தொடர்ந்து தன்னுடைய இனிமையான குரலால் பல பாடல்களை பாடி நம்மை சித்ரா தொடர்ந்து மகிழ்வித்து வருகின்றார். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய மகள் இறந்த நாளில் சித்ரா உருக்கமான பதிவையும் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

3 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

3 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

4 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

4 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

4 மணத்தியாலங்கள் ago