பின்னணி பாடகி சின்மயி கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். சன் தொலைக்காட்சியில் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்மயி டைட்டிலை வென்றார்.
அந்த நிகழ்ச்சியை பார்த்து ஏ.ஆர் ரகுமான் சின்மயிக்கு தனது படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார். இதுவரை சின்மயி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகையாக மட்டுமில்லாமல் சின்மயி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருக்கிறார்.
இவர் சமந்தா, திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா ஆகிய நடிகைகளுக்கு தமிழில் வாய்ஸ் கொடுக்கிறார். இந்நிலையில் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த சின்மயி கூறியதாவது, மீ டூ விஷயம் குறித்து நான் பேசிய போது 35 வயதில் சின்மயிக்கு வந்த அறிவு 19 வயதில் ஏன் இல்லை என கேள்வி கேட்பது அறிவு கெட்ட தனமானது.
என்னை எத்தனை பேர் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்கள். ஆனால் வைரமுத்து, ராதாரவியை ஏன் கேள்வி கேட்கவில்லை. யாரும் அவர்களை கேட்க மாட்டாங்க. காரணம் மீடியாவில் இருக்கும் முக்கால்வாசி பேர் ஆண்கள். அவர்கள் எந்த காலத்திலும் மற்றொரு ஆண் செய்த தவறை கேள்வி கேட்க மாட்டார்கள் என பேசியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…