“நீ சிங்கமா இருந்தா… நான் புஷ்பாடா”… தேர்தல் களத்தில் மோதிக்கொண்ட IPS அதிகாரியும் TMC வேட்பாளரும்… அடுத்து நடந்தது என்ன..?

Spread the love

மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் இடையேயான மோதல், ஒரு சினிமா பாணியிலான வார்த்தைப் போராக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2011 பேட்ச் அதிகாரியான அஜய் பால் சர்மா, தனது அதிரடி நடவடிக்கைகளால் ‘சிங்கம்’ மற்றும் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அறியப்படுபவர். ஃபால்டா பகுதியில் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாக வந்த புகாரையடுத்து, நேரடியாக வேட்பாளர் ஜஹாங்கீர் கானின் வீட்டிற்கே சென்ற அவர், “தவறு நடந்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்” என விடுத்த எச்சரிக்கை அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எச்சரிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னைத் திரைப்படக் கதாபாத்திரமான ‘புஷ்பா’வுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் வேட்பாளர் ஜஹாங்கீர் கான். “அவர் சிங்கம் என்றால், நான் புஷ்பா; இது வங்காளம் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ள அவர், பாஜகவின் தூண்டுதலின் பெயரிலேயே உத்தரப் பிரதேச அதிகாரிகள் தங்களை மிரட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதலைத் தொடர்ந்து, அஜய் பால் சர்மாவின் வாகனங்கள் அப்பகுதியைக் கடந்தபோது திரிணாமுல் ஆதரவாளர்கள் ‘ஜெய் பங்களா’ முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டதால், ஃபால்டா பகுதி ஒரு போர்க்களத்தைப் போலக் காட்சியளித்தது.

விவகாரம் இத்துடன் முடிந்துவிடாமல், தற்போது சட்ட ரீதியான சிக்கலாகவும் உருவெடுத்துள்ளது. நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதாக அஜய் பால் சர்மா மற்றும் மத்தியப் படையினர் மீது உள்ளூர் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் தேர்தல் கண்காணிப்பாளருக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, அதிகாரியின் பழைய நடன வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, “உங்கள் போலீஸ் திறமை, நடனத்தை விடச் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என எள்ளி நகையாடியுள்ளது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “அமைதியைக் குலைக்கவே இதுபோன்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள்” என்று அமைச்சர் சந்திரா பட்டாச்சார்யா விமர்சித்துள்ளார். ஒருபுறம் தேர்தல் ஆணையம் அமைதியான தேர்தலை உறுதி செய்ய முயன்றாலும், மறுபுறம் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான இந்த ‘சிங்கம் vs புஷ்பா’ மோதல் மேற்கு வங்கத் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. இதனிடையே, நடுநிலையோடு செயல்படாத அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திரிணாமுல் தரப்பு எச்சரித்துள்ளது.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

9 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

9 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

9 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

10 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

10 மணத்தியாலங்கள் ago